அமைச்சரவையில் பங்கேற்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளனர்.
சமூகத்துக்கு பாதுகாப்பில்லாத சூழ்ந்லையில் அமைச்சுப் பதவிகளில் வீற்றிருப்பதில் பயனில்லையென இது பற்றி அறிவிப்பதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஹலீம், ஹரீஸ், அலி சாஹிர் மௌலானா, பைசல் காசிம், கபீர் ஹாஷிம், அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment