அசாத் - ரிசாத் - ஹிஸ்புல்லா பற்றிய முறைப்பாடு அறிய விசேட பொலிஸ் குழு - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 June 2019

அசாத் - ரிசாத் - ஹிஸ்புல்லா பற்றிய முறைப்பாடு அறிய விசேட பொலிஸ் குழு



அசாத் சாலி, ரிசாத் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லாஹ் பற்றிய முறைப்பாடுகளைப் பெறுவதற்கு மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இன்றிலிருந்து 12ம் திகதி ஜுன் வரை எழுத்து மூலம் முறைப்பாடுகளைக் கையளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஒரு எஸ்ஸ மற்றும் க்கள் அடங்கிய பொலிஸ் குழு இவ்விவகாரத்தைக் கவனிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் பதவி நீக்கக் கோரி ரதன தேரர் உண்ணாவிரத போராட்டம் நடாத்திய அதேவேளை நேற்றைய தினத்தில் நாடளாவிய ரீதியில் இன வன்முறைக்கான அச்சம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் மூவரும் மற்றும் ஏனைய அமைச்சுப் பொறுப்புக்கள் வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment