கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தான் பெரமுனவின் செயற்பாடுகளில் ஈடுபடவோ அதை ஆதரிக்கப் போவதோ இல்லையென தெரிவித்திருந்த நிலையில் குமார வெல்கமவின் மாவட்ட தலைமைத்துவ பதவியைப் பறித்துள்ளது பொதுஜன பெரமுன.
மஹிந்த ராஜபக்சவின் பினாமி கட்சியன பெரமுனவின் பதுளை மாவட்ட தலைவராக வெல்கம பணியாற்றி வந்தார். மாவட்டத்தின் ஏனைய சு.க தலைவர்களான டிலான் மற்றும் நிமல் சிறிபால டிசில்வா மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்த நிலையிலேயே தான் அந்த வெற்றிடத்தை நிரப்பியதாக வெல்கம விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையிலேயே, கோட்டாபேயின் நியமனத்தை பகிரங்கமாக எதிர்த்து வரும் வெல்கமவுடனான உட்கட்சி முறுகல் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment