கல்முனை பிரச்சினையை 'ஞானசார' தீர்த்து வைக்கப் போகிறார்: மனோ - sonakar.com

Post Top Ad

Saturday, 22 June 2019

கல்முனை பிரச்சினையை 'ஞானசார' தீர்த்து வைக்கப் போகிறார்: மனோ


கல்முனையில் தமிழ் - முஸ்லிம் பகுதிகளில் இடம்பெற்று வரும் போராட்ட நடவடிக்கைகளை ரதன தேரர் பார்வையிட்டு, பேச்சுவார்த்தை நடாத்தித் திரும்பியுள்ள நிலையில் ஞானசார அங்கு சென்று தமிழ் தரப்பின் போராட்டத்தை முடித்து வைக்கப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.


முஸ்லிம் தரப்பு பிடிவாததும் தமிழ் தரப்பின் இயலாமையும் இப்பிரச்சினையை வேறு எங்கோ கொண்டு செல்வதாகவும் அங்கு சென்று திரும்பிய நல்லிணக்க அமைச்சர் தெரிவிக்கிறார்.

தமிழ்ப்பகுதியில் இயங்கும் பிரதேச செயலகம் தற்காலிகமானது எனவும் அதற்கெதிராக வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் முஸ்லிம் பகுதியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருப்போர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment