உள்ளூர் ஆளுகை நிறுவன பணிப்பாளர் ரிஷ்மி ஓய்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 June 2019

உள்ளூர் ஆளுகை நிறுவன பணிப்பாளர் ரிஷ்மி ஓய்வு


இலங்கையிலுள்ள ஏனைய அரச நிறுவனங்களை விட மாகாண  சபை உள்ளுராட்சி மன்றங்களுக்கு  உட்பட்ட நிறுவனங்கள் தான் கணிசமாளவு சேவைகளை மக்களுடன் நெருங்கி செய்து வருவதாக என்று இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் சஹீட் எம். ரிஷ்மி தெரிவித்தார்.



இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளராக இதுவரையலும் கடமையாற்றிய சஹீட். எம். ரிஷ்மி தமது பதவியை இன்று இராஜினாமாச் செய்த பின்னர் அலுவலக உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  பிரியா விடை வைபவத்தில் கலந்துகொண்ட அகில இலங்கை வை எம். எம். ஏ. சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சஹீட். எம். ரிஷ்மி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இங்கு பல பிரிவுகளாக இருந்த குழுக்களை ஒருமுகப்படுத்தி எனக்கு வேலை செய்ய தேவை இருந்தது. இங்குள்ள ஊழியர் அனைவரும் தனித்தனியாக சகோதர வாஞ்சையுடன் பழகி அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த கடமைகளை நிறைவேற்றி வந்தோம்.  இந்த அலுவலகத்தில் கடமை புரியும் அதிகாரிகள் அனைவரும் வெளிப்படையாகவே இயங்கி வருகின்றனர். இதில் ஒவ்வொருவரும் திறன் வாய்ந்தவர்கள் உள்ளனர். தத்தமது செயற் திறன் மூலமாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகளை செய்து வைத்துள்ளோம். 

இந்த நிறுவகத்தின் எதிர்பார்ப்பு என்ன? இதன் மூலம் எதனை வழங்க முடியும். இதன் மூலம்  ஒரு நபர் பயன் அடைய இருப்பாராயின்  அவர்களைச் சந்தோசப்படுத்த வேண்டும். அந்த வகையில் இவர்களுடைய   ஊழியர் சேம இலாப நிதி 15 விகிதமாக இருந்தது. அவற்றை 25 விகிதமாக உயர்த்த முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு இணங்க  அமைய ஆயுட் கால காப்புறுதித் திட்டம் ஒன்றை உருவாக்க முடிந்தது. 

இதற்கு மேலாக எமது அதிகாரிகளுடைய தகைமைக்கு ஏற்ப வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கான வரி அறவீடு சரியான முறையில் இருக்க வில்லை அதனை தரப்படுத்தி எப்படிப் போகலாம் என்பதை தயாரித்து வரிசைக் கிரமமாக செய்து வைத்துள்ளேன். ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையில் செயற்பட ஏற்பாடு செய்துள்ளோம். எந்த விதமான பிரச்சினையுமி;ன்றி செல்ல முடியும் என நான் கருதுகின்றேன்.

அதே போன்று தான் அதிகாரிகளுடைய உயர் பதவிகள் தொடர்பாகவும் நிரந்தரமாக்க வேண்டிய பதவிகள் தொடர்பாகவும் கவனத்தில் எடுத்து அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வேலை செய்யக் கூடியவர்களை உரிய தரத்திற்கு கொண்டு வந்து வைக்க முடிந்தது.

எமது நிறுவகம் தொடர்பாக விசேடமாக இலங்கையில் உள்ளுராட்சி மன்ற சபைகள் 341 உள்ளன. இது தொடர்பாக இந்த நிறுவனம் தொடர்பாக யாருக்கும் தெரியுமா? நான் அமைச்சமார்களுடன் அரச நிறுவனங்களில் பணியாற்றி  உள்ளுராட்சி மன்ற சபைகளுடன் எனக்கொரு தொடர்பு இருந்தது. அந்த வகையில் இந்த நிறுவனம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்ற யோசனை இருந்தது. எமது சிவில் சமூகம் நூற்றுக்கு 80 விகிதம் இருந்தாலும் இந்நாட்டையும் உலகத்தையும் ஆட்சி செய்வது ஊடகத்துறையாகும். எனினும் எங்கள் நிறுவகத்தில் அது பின்தங்கிய நிலையில் இருந்தது.  எங்களுக்கு விளம்பரம் அவசியமாகும். ஊடகத்துறையின் பக்கம் கைகோர்த்துக் கொண்டு அது  சம்மந்தமாக  கலந்துரையாடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். சுற்றாடல் அதிகாரிகளுடன் இணைந்து  எமது சகல  செயலத்திலும்  எட்டு செயலகம் உள்ளன.  அந்த எட்டு செயலகத்திலும் பசுமையான சுற்றுச் சூழலை ஏற்படுத்துவதற்கு  எப்படி சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயலாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டோம்.

நான் முஸ்லிம சமுதாயத்தின் பிரதிநிதியாக இருந்தாலும் கணிசமானளவு சிங்கள சகோதர மக்களுடன் பழகிவருகின்றேன். என்னோடு பணிபுரிந்த அனைவரும் முஸ்லிம் அ;ல்லாதவர்களாவர். இந்;தச் சந்தர்ப்பத்தில் இரு சமூகங்களுக்கிடையே சக வாழ்வையும் சமாதானத்தை உறுதி செய்யும் வகையில் உங்களுடன் சேர்ந்து எனக்கு பணியாற்றக் கிடைத்தமையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். நாம் எல்லோரும் இலங்கையர்கள். முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் கடலிலுள்ள மீன்களும் தண்ணீரும் போன்றவர்கள். மீன்கள் நீரை விட்டு வெளியேறுமாயின் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையிலே அரபு மொழி தடை செய்வது தொடர்பில் எமது அமைச்சின் மூலமாக சுற்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக நான் அறிந்து கொண்டேன். எனினும் இது   உலகிலுள்ள அரபு நாடுகளில்  அரபு மொழிக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சென்று இருக்கிறது. அந்நாடுகள் எமது நாடுகளுக்கு எதிராகச் செயற்படுமாயின் எமது நாட்டின் எதிர்கால்த்திற்கு அது பெரும் சவாலாக அமையும். எவ்வாறாயினும் இந்நாட்டின் சிங்கள முஸ்லிம் சமூக நல்லிணக்கதிற்காகவும் சகவாழ்வுக்காகவும்  ஒற்றுமைக்காகவும் அயராது பாடுபடப் போகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்

-இக்பால் அலி

No comments:

Post a Comment