2012ம் ஆண்டு முதல் நாளொன்றுக்கு சுமார் 1250 இலவச பகல் உணவு வழங்கலை மேற்கொண்டு வந்த, ஜனபோச எனும் பெயரில் இயங்கிய முஸ்லிம் தொண்டு நிறுவனம், அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத பிரச்சாரங்களின் பின்னணியில் தமது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் சோனகர்.கொம்முக்கு கருத்து வெளியிடுகையில், தமது அமைப்பில் பல்லினத்தவர்களும் பணி புரிவதாகவும் 2012 முதல் பல வைத்தியசாலைகளில் இவ்வாறு உணவு விநியோகம் செய்து வந்ததாகவும் இனி வரும் காலங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இதனை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் விளக்கமளித்திருந்தார்.
ஏழை மக்களுக்குப் பசியாறுவதற்கு வழங்கி வந்த சேவையில் தமது நிறுவனம் பூரண திருப்தியடைந்து வந்த நிலையில் தற்போது உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசமப் பிரச்சாரங்கள் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் கவலையுடன் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment