குண்டு துளைக்காத கார்: இன்னுமொன்று கேட்டு மஹிந்த அடம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 June 2019

குண்டு துளைக்காத கார்: இன்னுமொன்று கேட்டு மஹிந்த அடம்!


ஏற்கனவே மூன்று குண்டு துளைக்காத கார்களைப் பாவித்து வரும் மஹிந்த ராஜபக்சவுக்கு மேலும் ஒரு வாகனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதை ஜே.வி.பி எதிர்த்துள்ளது.



எனினும், இது குறித்து நாடாளுமன்றில் கருத்துரைத்த மஹிந்த தான் எதிர்க்கட்சித் தலைவரான போது அதற்கு முன்னிருந்தவர் குண்டு துளைக்காத வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் தனக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மாத்திரமே தரப்பட்டதாகவும், புதிதாக ஒரு வாகனம் தருவதில் என்ன தவறு? எனவும் வினவியுள்ளார்.

எனினும், ஏலவே மஹிந்த ராஜபக்சவுக்கு பென்ஸ் - எஸ் ரக குண்டு துளைக்காத வாகனங்கள் மூன்று உட்பட இரண்டு டிபன்டர்கள், மேலும் ஒரு பென்ஸ் கார், லேன்ட் க்ரூசர் மற்றும் கப் ரக வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment