மூவருக்கும் தீவிரவாதத்துடன் எவ்வித தொடர்புமில்லை: பொலிஸ் அறிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 23 June 2019

மூவருக்கும் தீவிரவாதத்துடன் எவ்வித தொடர்புமில்லை: பொலிஸ் அறிக்கை



தீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதற்கான எவ்வித முறைப்பாடுகளும் இல்லையென சபாநாயகருக்கு அறிக்கை வழங்கியுள்ளது இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு.



அமைச்சர் ரிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுனராகவிருந்த அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் அவர்களை பதவி நீக்க வேண்டும் எனவும் கோரி அத்துராலியே ரதன தேரர் உண்ணாவிரதமிருந்த அதேவேளை பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த மூவர் உட்பட அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியிருந்தனர்.

ஜுன் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரையான ஒரு வார காலம் முறைப்பாடுகளை வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு, டிஐஜி KD பிரியந்த தலைமையில் மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று இதற்கென நியமிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அவ்வாறு எவ்வித முறைப்பாடுகளும் இல்லாத நிலையில் ரிசாத் பதியுதீன் உட்பட மூவருக்கும் தீவிரவாதத்தோடு எவ்வித தொடர்புமில்லையென சபாநாயகருக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment