இலங்கையில் புதனன்று பெருநாள்: பிறைக்குழு அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 June 2019

இலங்கையில் புதனன்று பெருநாள்: பிறைக்குழு அறிவிப்பு



ஹிஜ்ரி 1440 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மாணிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் மஃரிபு தொழுகைக்குப் பிறகு பிறைக் குழுவின் தலைவர் அப்துல் ஹமீட் பஹ்ஜி தலைமையில் இடம்பெற்றது.


இம்மாநட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், மேமன் சங்க உறுப்பினர்கள், ஸாவியாக்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள்; எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டில் பல பாகங்களிலும் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றதால் நாளை ஜூன் மாதம் 5ஆம் திகதி புதன் கிழமை ஈதுல் பித்தர் எனும் நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடுவது என ஏகமனதாக  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ் உத்தியோக பூர்வ அறிவித்தலை  பிறைக் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் உத்தியோக பூர்வமாக இலங்கை வாழ் சகல முஸ்லிம் மக்களுக்கு அறிவித்தது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment