ரதன தேரரை கார்டினல் மல்கம் ரஞ்சித் பார்க்கச் சென்றது குற்றம் என்று சொல்லும் மங்கள சமரவீரவிரவின் கண்ணுக்கு ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கள் தெரியவில்லையா என கேள்வியெழுப்பியுள்ளார் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம.
கண்டியில் உண்ணாவிரதமிருந்த ரதன தேரரை கார்டினல் சென்று பார்த்தமையானது இனவாதத்தை தூண்டும் செயல் என மங்கள தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்குமுகமாகவே இவ்வாறு தெரிவித்துள்ள திலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் அடிப்படைவாதிகளைக் காப்பாற்றுவதற்காகவே பதவி துறந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
திகன பகுதிகளில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியது திலும் மற்றும் லொஹான் ரத்வத்தை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வருடம் லண்டனில் வைத்து பெயர் குறிப்பிட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment