![](https://i.imgur.com/knILCNJ.png?1)
கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் ஏதோ திடீரென இடம்பெற்ற சம்பவம் ஒன்றில்லையென தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
தல்கஸ்யாயயில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், குறித்த செயற்பாடுகள் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு வந்து அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் இடம்பெறும் விசாரணைகள் நீதியான தீர்வைத் தருமா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின் இலங்கையின் அரசியல் நாட்டை இரத்தம் தோய்ந்த பூமியாகவே மாற்றியமைத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment