தலவாகல: சம்மாந்துறை நபர் போலி வைத்தியர் என பொலிசில் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 14 June 2019

தலவாகல: சம்மாந்துறை நபர் போலி வைத்தியர் என பொலிசில் ஒப்படைப்பு


தலவாகல பகுதியில் கடந்த இரு வருடங்களாக இயங்கி வந்த சிறு மருத்துவ நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு அங்கு வைத்தியராக அறியப்பட்டிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த 49 வயது நபரை பொலிசில் ஒப்படைத்த சம்பம் இடம்பெற்றுள்ளது.



குறித்த நபர், அரசாங்க வைத்தியராக பதிந்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் அதற்கான ஆவணங்களோ ஆதாரங்களோ இல்லையென பிரதேசத்தின் நகர சபைத் தலைவர் தெரிவிககிறார். 

பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டு வந்த நிலையில் அங்கு நுழைந்த நபர்கள் இவ்வாறு குறித்த நபரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரது மருத்துவ சேவை நிறுவனத்தில் பெருமளவு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment