மட்டக்களப்பு பல்கலைக்கழகம் எனும் பெயரில் முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் பெரும் முதலீட்டில் ஆரம்பிக்க முனைந்த கல்வி நிலையம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதனை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
முன்னதாக, அதனை அரசு அவ்வாறு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்திருந்த ஹிஸ்புல்லாஹ், அண்மையில் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து முஸ்லிம்கள் இலங்கையில் வேண்டுமானால் சிறுபான்மையாக இருக்கலாம் உலகில் பெரும்பான்மையானவர்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வைத்து, ஹிஸ்புல்லாவின் பேச்சை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் வெளியிட்டுள்ளார் பிரதமர். இது தொடர்பில் முன்னாள் கிழக்கு ஆளுனரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலளனிக்கவில்லை, எனினும் ஹிஸ்புல்லாஹ்வின் பதிலறிவதற்கான முயற்சிகளை சோனகர்.கொம் செய்திக்குழு மேற்கொணடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment