முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவில்லையென வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விளக்கமளித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.
9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது இராஜினாமாவை ஒரே கடிதத்தில் உள்ளிட்டு ஒப்பமிட்டு, அதனை பிரதமரிடம் முதலில் ஒப்படைத்ததாகவும் அதன் பின்னரே அது தனித்தனியாக ஒவ்வொருவரினாலும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பிரதமரால் அறிவுறுத்தப்பட்டதாகவும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு தத்தமது ஊர்களுக்கு சென்றிருந்ததனாலேயே இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment