முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாத குழுக்கள் தொடர்பிலான விசாரணைகளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அரச உளவு நிறுவனம் (SIS) தலையிட்டு தடுத்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
தேசிய புலனாய்வுத்துறைக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் பாரிய இடைவெளியொன்று இருந்ததாகவும் அதற்கான முழுப் பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும் எனவும் பூஜித விளக்கியிருக்கும் 20 பக்க அறிக்கையொன்று உச்ச நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதிலேயே ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர்க்க முடியாமல் போனமைக்கு ஜனாதிபதியே பொறுப்பெனவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு முடக்கப்பட்டதன் பின்னணி ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ன் அலட்சியமும் தலையீடும் எனவும் பூஜித விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment