ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களையடுத்து தொடர்ந்தும் விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 22ம் திகதி கல்குடா பகுதி ஹோட்டல் ஒன்றில் அரபு நாட்டைச் சேர்ந்தவர்களை அப்போதைய ஆளுனர் ஹிஸ்புல்லா சந்தித்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் தொடர்பில் இன்று அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடாத்தியுள்ளது.
இதன் நிமித்தம் மு.ப ஹிஸ்புல்லா அங்கு ஆஜராகியிருந்தமையும் ஞானசார சிறையிலிருந்து வெளி வந்திருந்த நிலையில் இதனை முக்கிய விடயமாக பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment