குற்றங்கள் நிரூபிக்கப்படாவிட்டால் மீண்டும் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 June 2019

குற்றங்கள் நிரூபிக்கப்படாவிட்டால் மீண்டும் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி


ஈஸ்டர் தாக்குதலையடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் அனைத்து அமைச்சு பதவிகளையும் முஸ்லிம்கள் இராஜினாமா செய்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளார் பிரதி அமைச்சர் நலின் பண்டார.

ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் எழுத்து மூல முறைப்பாடுகள் கோரப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வார காலம் அதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாத நிலையில் மீண்டும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நலின் பண்டார விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment