வெலிகம, கோட்டகொடை பகுதிக்குள் நுழைந்த நபர் ஒருவர் முஸ்லிம்களுடன் வலிந்து சண்டையிழுக்க முயன்ற சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
எனினும், பிரதேச முஸ்லிம்கள் இது தொடர்பில் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டதையடுத்து பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற வன்முறையாளர் கூட்டம் தடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மற்றும் இராணுவம் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் கண்டி - அளுத்கம பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் இருக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment