அடுத்தவர்களது பசியின் துயரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித குலத்திற்கு கிடைத்த கொடையாகும் என தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நோன்பு காலத்தில் லௌகீக இன்பங்களிலிருந்து விடுபட்டு சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு சமூகத்தில் வறியவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்கும் தமது உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை வழங்குவதானது, அனைத்து தெற்காசிய சமயத் தத்துவங்களும் போதிக்கும் ஆன்மீக நோக்கங்களின் பொதுப்பண்பை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.
அடுத்தவர்களது பசியின் துயரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித குலத்திற்கு கிடைத்த கொடையாகும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment