ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனையும் விட ஆபத்தான மறைமுக சக்தியொன்று இருப்பதாகவே தாம் கருதுவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் இவ்வாரம் மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐ.எஸ். தவிர்ந்த வேறு தொடர்புகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே, மு.கா தலைவர் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து இத்தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment