இந்தியாவிலிருந்து இவ்வருடம் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 50 - 60 வீதம் வரையான கட்டணக் கழிவுகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அமைச்சு.
தற்போது மும்பாய் சென்றுள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ள அதேவேளை, இந்திய இளைஞர்களைக் கவர இலங்கையில் இரவு நேர களியாட்ட விடுதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின் வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறையை இந்தியாவின் உதவி கொண்டு கட்டியெழுப்பும் பின்னணியில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment