முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் போன்றவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் கட்டாயம் தேவையென தெரிவித்திருக்கும் சஜித் பிரேமதாச அவர் மீண்டும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வித தவறுகளும் , குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒரு சிரேஷ்ட உறுப்பினர் தமது சமூகத்தாருக்காக அமைச்சுப் பதவியைத் துறந்தமை போற்றத்தக்கது என தெரிவித்துள்ள சஜித், நாட்டின் அபிவிருத்திக்கு கபீர் போன்ற புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.
கபீர் ஹாஷிம் மீண்டும் பதவியை ஏற்க வேண்டும் எனக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றே அவர் மீதான மக்கள் அபிப்பிராயத்தை அறியப் போதுமானது எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment