சாய்ந்தமருதில் தற்கொலை செய்து கொண்ட சஹ்ரானின் சகாக்கள் நால்வரின் உடல்கள் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இரசாயன பகுப்பாய்வுக்காக முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் பழுதடைந்த காரணத்தினால் மீண்டும் அவ்வுடல் பாகங்களைத் தோண்டியெடுத்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதான மஜிஸ்திரேட் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் இவ்வாறு உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment