![](https://i.imgur.com/Lbv4Zru.png)
இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கக் கூடாது என்கிறார் ஆனந்த தேரர்.
அவ்வப்போது வில்பத்து விவகாரத்தைத் தூக்கிப்பிடித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனுடன் சர்ச்சைகளை வளர்த்து வரும் ஆனந்த தேரர், மீண்டும் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அது விசாரணைகளுக்குத் தடையாகி விடும் என தெரிவிக்கிறார்.
அமைச்சர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஏனையோரும் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment