தேர்தலை முன்னிட்டு 'புதிய' கூட்டணி: பெரமுன அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 28 June 2019

தேர்தலை முன்னிட்டு 'புதிய' கூட்டணி: பெரமுன அறிவிப்பு


ஜனாதிபதி தேர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு விரைவில் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கிறது மஹிந்தவின் பொதுஜன பெரமுன.



கூட்டு எதிர்க்கட்சி, கூட்டு எதிரணி, பெரமுன என பல பெயர்களில் அறியப்பட்டுள்ள மஹிந்த அணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கின்றமையும் சுதந்திரக் கட்சியோடு சேராமலே தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பெரமுனவின் பினாமி தலைவரான ஜி.எல் பீரிஸிடமிருந்து எதிர்வரும் ஓகஸ்ட் 11ம் திகதி தலைமைப்பொறுப்பை மஹிந்த ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment