நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சமநீதி இருந்தால் யாருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லையென தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
சட்டம் ஒரு சிலருக்கு சாதகமாக இயங்கிக் கொண்டிருப்பதால் குற்றவாளிகளும் குற்றச்செயல்களும் அதிகரித்திருப்பதாகவும் இவ்வாறான நிலையில் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது அவற்றைத் தடுப்பதற்கான வழியாக அமையாது எனவும் சம்பிக்க மேலும் தெரிவிக்கிறார்.
பௌத்தர்கள் என்ற அடிப்படையில் ஒரு உயிரைப் பறிப்பது ஏற்றுக்கொள் முடியாதது எனவும் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து சம்பிக்க கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment