கல்முனை: பிரதேச செயலக உருவாக்கத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் - sonakar.com

Post Top Ad

Thursday, 20 June 2019

கல்முனை: பிரதேச செயலக உருவாக்கத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம்



இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் தமிழ் பகுதியில் உருவாக்கப்பட்ட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.



இன்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய அப்பிரதிநிதிகள் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில் அரச சார்பற்ற பல அமைப்புகளுடன் மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக  கல்முனை வர்த்தக சமூகமும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment