தனது நெருங்கிய நண்பர்களான முன்னாள் கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுனர்கள் ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரின் இராஜினாமா தனக்கு கவலையளிக்கின்ற அதேவேளை, அவர்களது இராஜினாமா மூலம் முஸ்லிம் சமூகத்தை சூழ்ந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
குறித்த தினம் உண்ணா விரதம் எனும் போர்வையில் பல இடங்களில் இனவாதிகள் கூடியிருந்த நிலையில், பொய்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இடமளித்து அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா இராஜினாமா செய்திருந்தனர்.
அமைச்சு பதவிகளில் இருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது இராஜினாமாவை கையளித்தததுடன் ரதன தேரரின் உண்ணாவிரத நாடகமும் முடிவுக்கு வந்தது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவிக்கின்றமையும் தற்போது அரசாங்கம் முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்திருக்கும் சூழ்நிலை அவதானிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment