கடந்த மார்ச் 15ம் திகதி நியுசிலாந்து, க்றைஸ்ட் சேர்ச் பகுதியில் பள்ளிவாசல்களில் திட்டமிட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்து 51 பேரைக் கொன்று குவித்த அவுஸ்திரேலிய பயங்கரவாதி பிரன்டன் தான் குற்றமற்றவன் என இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளான்.
கடும்பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பிரன்டனை இன்று நீதிமன்றம் காணொளி ஊடாகவே விசாரித்திருந்தது. இதன் போதே தான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லையென தன் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை பிரன்டன் மறுத்துள்ளான்.
ஆகக்கூடினால் தனக்கு வழங்கப்படக் கூடிய சிறைத்தண்டனை என்னவென்பதையும் முன் கூட்டியே அறிவித்து விட்டே பயங்கரவாத தாக்குதல்களை பிரன்டன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment