ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய சஹ்ரானை விடவும் சம்பவங்களுக்க ஒரு வாரத்துக்கு முன் வெளிநாடு சென்று சவுதியில் கைதாகி நாடு கடத்தப்பட்டுள்ள மில்ஹானே ஆபத்தான நபர் என புலனாய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும் குறித்த நபரே தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்த தலைவராக வந்திருக்கக் கூடும் எனவும் இந்நபரின் நேரடி உத்தரவிலேயே வவுணதீவு பொலிஸ் ஊழியர் கொலை மற்றும் கபீர் ஹாஷிமின் செயலாளர் மீதான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் நம்பப்படுகிறது.
இதேவேளை, ஐ.எஸ். அமைப்போடு இணைந்து சிரியாவில் போர் புரிய விரும்பிய இளைஞர்களையே சஹ்ரான் தடுத்து வைத்து இலங்கையில் புனிதப் போர் நடாத்தும் தேவையிருப்பதாகக் கூறி வழி நடாத்தியதாகவும் தற்போது இடம்பெறும் விசாரணைகளை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment