ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதியைப் பெற்றுள்ள ஒரே நபர் சஜித் பிரேமதாச என தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க.
அனைத்து சமூகங்களினதும் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றுள்ள ஒரே நபர் அவரே எனவும் தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சியில் அவரை விட சிறந்த தெரிவு யாரும் இல்லையெனவும் இன்றைய தினம் குருநாகலில் வைத்து அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியாவதற்கு யாருடையோ பிள்ளையென்பது தகுதியில்லையெனவும் ஆகக்குறைந்த கல்வித் தகைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment