போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப் போவதாக நீண்டகாலமாக தெரிவித்து வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, விரைவில் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கிறார்.
இதற்கான உத்தரவில் தான் ஏற்கனவே கைச்சாத்திட்டு விட்டதாக நேற்றைய தினம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, விரைவில் மரண தண்டனை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் உட்பட பல மேற்கு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment