மரண தண்டனையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் விரைவில் போதைப் பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் தூக்கிலிடப்படவுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், இது ஏற்புடையதல்ல என தெரிவிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்திலும் இவ்வாறு தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு, ஆவணங்கள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் தான் அனுமதிக்க மறுத்ததாகவும் போதைப்பொருளை ஒழிக்க மரண தண்டனை பயன் தராது எனவும் தெரிவிக்கிறார்.
அத்துடன் மரண தண்டனை நிறைவேற்றுவதன் ஊடாக ஒருவர் தேர்தலை வெல்ல முடியாது எனவும் அவ்வாறு செய்வதாக இருந்தால் தூக்கிலிடப்பட வேண்டிய பல பேரின் பட்டியல் தம்மிடமும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment