தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட விபரத்தை வெளியிடாது சி.ஐ.டியினர் ரிசாத் பதியுதீனை பாதுகாத்து வருவதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மாத்திரமன்றி பாதுகாப்பு அமைச்சுக்கும் இத்தகவல்கள் தெரியும் எனவும் தேவையான ஜி.பி.எஸ் அறிக்கைகளும் பெறப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.
PL-2961, PL-2962, PL-2963 மற்றும் PL-2882 ஆகிய பதிவிலக்கம் கொண்ட வாகனங்களே இவ்வாறு தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment