பிரதேச செயலகம் தரமுயர்த்தும் விடயம் நடக்காமல் போனால் நிச்சயமாக நான் நஞ்சருந்தி தமிழ் உறவுகளுக்காக தற்கொலை செய்து கொள்வேன் என கல்முனை விகாராதிபதி ரன்முத்து கல சங்கரத்ன தேரர் இன்று (22) தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்ற உண்ணாவிரதப் போராட்ட களத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட கலகொட அத்தே ஞானசார தேரர் குழுவினரால் தரமுயர்த்துகின்ற விடயத்தில் மிக விரைவில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் அங்கு உரையாற்றிய கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மேலும் தனதுரையில்,
முஸ்லிம்களுக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலை அநியாயம் நடந்தால் அவர்களுடனும் நான் ஒன்றிணைந்து போராடுவேன்.
இங்கு இருக்கின்ற எல்லோரும் எனது நண்பர்கள். இங்கே இருக்கின்ற உண்ணாவிரத போராட்டக்காரர்களை எதிர்த்து அங்கே முஸ்லிம்கள் இருக்கின்ற சத்தியாக்கிரகப் போராட்டம் ஒரு நடிப்பு நாடகமாகும்.
நான் இந்த பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் வரைக்கும் உங்களோடு இருப்பேன் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் நீங்கள் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் என்னை நம்புங்கள் நான் உங்களோடு இருப்பேன் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் நாங்கள் சுழற்சி முறையில் இங்கு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வோம்.
வாக்குறுதி அளித்தபடி இந்த பிரதேச செயலகம் தரமுயர்த்தும் விடயம் நடக்காமல் போனால் நிச்சயமாக நான் நஞ்சருந்தி இந்த தமிழ் உறவுகளுக்காக தற்கொலை செய்து கொள்வேன்.
-எஸ். அஷ்ரப்கான்
No comments:
Post a Comment