மாகந்துரே மதுஷ் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கி மீட்பு: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Saturday, 29 June 2019

மாகந்துரே மதுஷ் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கி மீட்பு: பொலிஸ்


பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷ் ஒளித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் துப்பாக்கியொன்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.


தடுப்புக்காவலில் உள்ள மதுஷ், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டக்களுடனான மகசீன் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

டுபாயிலிருந்து மதுஷ் நாடு கடத்தப்படவிருந்த நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததோடு சில காலமாக மதுஷ் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment