கேகாலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து வரும் கபீர் ஹாஷிம் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் அடிப்படையற்றது எனவும் இவற்றினால் பாதிக்கப்பட்டு அவர் பதவியைத் துறந்திருக்க அவசியமில்லையெனவும் வலியுறுத்தி மாவனல்லை ஐக்கிய பிக்குகள் சங்கம் நடாத்திய ஊடக சந்திப்பு பிறிதொரு பிரிவால் குழப்பப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மாவனல்லை மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்த வேறு சில பௌத்த துறவிகளே இவ்வாறு இக்கூட்டத்தைக் குழப்பியுள்ளதோடு கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முக்கிய பௌத்த துறவிகள் யாரும் கலந்து கொள்ளவில்லையெனவும் அது முன்னாள் அமைச்சரின் இணைப்பாளராகப் பணியாற்றும் துறவி ஒருவரின் ஏற்பாட்டில் கீழ் நிலை பிக்குகளைக் கொண்டு நடாத்தப்பட்ட நாடகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபீர் ஹாஷிமின் இராஜினாமாவையடுத்து அவருக்கு கேகாலை மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என அண்மையில் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment