தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரினால் விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலை நிராகரித்துள்ள மாரவில நீதிமன்றம் சகல இனத்தவரும் தொடர்ந்தும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வழி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரான பெரமுன உறுப்பினர் சுசந்த பெரேரா அண்மையில் இவ்வாறு ஒரு அறிவித்தலை வெளியிட்டதன் பின்னணியில் சர்ச்சை உருவாகியிருந்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றுக்கு அழைத்து குறித்த நபரிடம் விசாரணை செய்த நிலையில் மாரவில நீதிமன்றம் குறித்த தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து பல வழிகளில் முஸ்லிம் சமூகத்தின் மீது நெருக்குவாரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment