தமிழ் மொழி மாணவர்களின் உரிமை மீறல்: மன்னிப்பு கோரிய கீர்த்தி! - sonakar.com

Post Top Ad

Monday, 17 June 2019

தமிழ் மொழி மாணவர்களின் உரிமை மீறல்: மன்னிப்பு கோரிய கீர்த்தி!


தென்மாகாண தமிழ் மொழி  பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு காலி, தக்ஷினபாய கட்டிடத்தில் 15.06.2019 அன்று இடமபெற்றது.


இந்நிகழ்வில் 94 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்மாகாண ஆளுனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் விஷேட உரையாற்றிய ஆளுனர், தனதுரையில், தென்மாகாணத்தில் தமிழ் மொழிப்பிரிவில் கல்வி கற்கும் 15,000 மாணவர்களுக்கு கடந்த 5.5 ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமை மீறப்பட்டுள்ளது. இது பாரியதொரு அநியாயம்   என தெரிவித்த அவர் அதறகாக மன்னிப்பு கோரினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் " மாணவர்களே உங்களின் உரிமை மீறப்பட்டுள்ளது. மாணவர்களே! எம்மை மன்னியுங்கள்,மாணவர்களே! எம்மை மன்னியுங்கள், இன்று நியமனம் பெறும் ஆசிரியர்கள் உரிமை பறிக்கப்பட்ட மணவர்களுக்கே கற்பிக்க செல்கிறிர்கள் எனவே அவர்ககளுக்காக 24 மணி நேரமும் செயலாற்றுங்கள் "என்றார், தென்மாகணத்தில் 314 தமிழ் மொழிப்பிரிவு ஆசிரிய வெற்றிடத்தில் இன்று 94 பட்தாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 188 ஆசிரிய நியமனங்களை வ்ழங்குவதாவும் தெரிவித்தார்.

கடந்த 5.5 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரிய நியமன முறைகேடுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை காரணமாக குறிப்பாக தென்மாகணத்தில் 40க்கும் மேற்பட்ட தமிழ்மொழிப் பிரிவு பாடசாலைகளிக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது தடைபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-Ibnuasad

No comments:

Post a Comment