அத்துராலிய ரதன தேரரின் உண்ணாவிரதம், ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த மூவரையும் பதவி விலக்க வேண்டும் என அரசியல் தரப்பிலும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்ற அதேவேளை, ரதன தேரரின் உண்ணாவிரதம் தொடர்கிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் இதற்கு ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நிமித்தம் ஆளுனர்களை பதவி நீக்குவது குறித்தும் ஜனாதிபதி தரப்பு ஆலோசிப்பதாக அறியமுடிகிறது. ரிசாத் பதியுதீன் தானாகவே பதவி விலகுவதே கௌரவம் என முக்கிய அரசியல் தலைமைகள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment