உயிர்களைக் கொல்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்குப் புறம்பானது என தெரிவிக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் மரண தண்டனை திட்டத்தை அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார்.
மஹிந்த ராஜபக்ச, ஜே.வி.பி, த.தே.கூ உட்பட முக்கிய கட்சிகள் ஜனாதிபதியின் மரண தண்டனைத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என மைத்ரி தெரிவித்து வருகிறார்.
போதைப் பொருள் ஒழிப்புக்கு மரண தண்டனை தீர்வாகது என மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment