பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என மகாநாயக்கர்கள் கோரவில்லையென மறுப்பு வெளியிட்டுள்ளார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
ஞானசாரவை சிறையிலிருந்து விடுவித்து, இனவாத சக்திகளை அணி திரட்டும் முயற்சி இடம்பெற்று வந்த நிலையில் இரு முஸ்லிம் ஆளுனர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரி திடீரென ரதன தேரர் மறுபுறத்தில் உண்ணாவிரதமிருந்து சர்ச்சையை உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில், சமூகப் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்பு வகித்தவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
தற்போது மீண்டும் முஸ்லிம் MPக்கள் சிலர் பதவிகளை ஏற்றுக்கொள்ளக் கூடும் எனும் ஊகம் நிலவுகின்ற நிலையில் ரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment