இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனும் வாக்குறுதியோடு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன, தமது கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபரில் மஹிந்த ராஜபக்சவுடன் ஏற்பட்ட நட்பின் ஊடாக பெரமுனவின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியாது போன நிலையில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்ரிபால சிறிசேன போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரமுன தரப்பில் கோட்டாபே போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுவதோடு ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment