தற்போது அமுலில் இருக்கும் அவசர கால சட்டத்தை மேலும் ஒரு தடவை நீடிக்கும் தேவையுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
கைது செய்யப்பட்டுள்ளவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்கும் நிமித்தம் அவசர கால சட்டம் அவசியப்படுவதாக இன்றைய தினம் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் வைத்து விளக்கமளித்துள்ள மைத்ரிபால சிறிசேன, அவசர கால சட்டம் மேலும் ஒரு தடவை நீடிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment