ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஜிஹாதிய சிந்தனையை இல்லாதொழிக்கும் தேவை அதிகரித்திருப்பதாகவும் அது பிராந்திய பாதுகாப்புக்கு பேராபத்தானது எனவும் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து.
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்த அதேவேளை இலங்கையின் தேவைகள் எதுவாக இருந்தாலும் முதலில் கை கொடுக்கும் நண்பன் இந்தியாவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம், ஜிஹாதிய சிந்தனாவாதத்தினை ஊக்குவிக்கும் சக்திகளை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை தோன்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment