ரதன தேரரது உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அளுத்கமயில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத நிகழ்வில் பிரதேசத்தின் பௌத்த துறவிகளுடன் அவதானிக்கத்தக்க அளவு 'ஆதரவாளர்களும்' கலந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஹற்றன், கண்டி, பொலன்நறுவ என பல இடங்களில் தேரரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அளுத்கமயில் தயார்படுத்தல்கள் இடம்பெற்று வந்திருந்தது.
இந்நிலையில், தற்போது அங்கு சுமார் 300 பேரளவில் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment