ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவையும் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
நாடாளுமன்றுக்கு பதிலளிக்கும் கடமைப்பாடு உள்ள ஜனாதிபதியும் இதற்கு விதிவிலக்கானவர் இல்லையென சுட்டிக்காட்டியுள்ள அநுர, தாக்குதல் நடந்த தினம் கொழும்பை விட்டு வெளியே சென்றிருந்த ரணில் விசாரிக்கப்படுவதும் அவசியம் என்று தெரிவிக்கிறார்.
இதுவரை வழங்கப்பட்டுள்ள சாட்சியங்கள் அடிப்படையில் அரசாங்கம் குறித்த தாக்குதலைத் தடுத்திருக்கலாம் என்பதால் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்கும் தேவையும் உள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment