மக்களை தைரியப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்கவே தான் அவ்வாறு பேசியதாக விளக்கமளித்துள்ளார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்.
முஸ்லிம்கள் இலங்கையில் வேண்டுமானால் சிறுபான்மையாக இருக்கலாம், ஆனால் உலகில் பெரும்பான்மையானவர்கள் என அண்மையில் காத்தான்குடியில் வைத்து தெரிவித்திருந்த ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பட்டியலிட்டு நெருக்குவாரம் தொடர்பில் பேசியிருந்தார்.
எனினும், அந்த உணர்வூட்டல் மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கி வழமைக்குத் திரும்ப வைக்கவே அப்படிப் பேசப்பட்டது என அவர் தற்போது தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment