பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச என்ற நிலை மாறி, ராஜபக்ச குடும்பத்தின் ஏனையோரின் பெயர்களும் பரவலாக இணைத்துப் பேசப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்பது தொடர்பில் தெளிவான விடையைக் கூற மறுக்கின்ற சமல் ராஜபக்ச, கால நேரம் வந்ததும் பதில் கிடைக்கும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடத் தயார் என தெரிவிக்கின்ற கோட்டாபே அண்மையில் சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்னொரு அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சமல் ராஜபக்சவின் பெயர்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு தகுதிக்கான 'வயது' வரும் வரையே மஹிந்த ராஜபக்ச தனது சகோதரர்களை வைத்து அரசியல் செய்வதாக அரசியல் அரங்கில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment