ராஜபக்ச குடும்பம் இந்நாட்டை ஆட்சி செய்து உருவாக்கியதெல்லாம் போதும், அவர்களை ஒதுக்கி மாற்றுத் தலைமையை தேடுங்கள் என தெரிவிக்கிறார் ஸ்ரீலசுக கொள்கைப் பரப்புச் செயலாளர் துமிந்த திசாநாயக்க.
கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாவது வெறும் கனவுதானே ஒழிய நனவாகப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுனவிலிருந்து புதிய தலைவர்களுக்கான காலம் கனிந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
கடந்த ஒக்டோபரில் மலர்ந்த மைத்ரி - மஹிந்த நட்புறவின் போதும் துமிந்த முரண் பிடித்து இணைந்து கொள்ள மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment